பிரதான செயலகம் (ஏற்பாட்டுப் பிண்ணனி)

 

உல்லாசப் பிரயாணிகளின் மனதைக் கவர்ந்த கடற்கரைகளினாலும், உலக உரித்தாகக் கவனத்திற் கொள்ளும் அயன மண்டல மழை வளமாகிய சிங்கராச அடவியையூம் காலனித்துவக் கால புராதனங்களாக எஞ்சியூள்ள கோட்டை மதில்களாலும், கிழக்கையூம் மேற்கையூம் ஒன்றிணைக்;கும் கடற் பாதையின் முக்கிய துறையான காலித் துறைமுகம் அடங்கிய அதே போன்று நீண்ட வரலாற்றுக்கு உரிமை கோரும் தென்மாகாணத்தின் தலை நகரமாகிய காலி மாநகரத்தில் தென் மாகாண பிரதான செயலகம் அமைக்கப்பட்டிருக்கின்றது.


இலங்கை ஜனநாயக சோஷலிசக் குடியரசின் 13வது அரசியலமைப்பின் திருத்தத்தின் மூலம் தென் மாகாண சபைக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களின் படி அமைச்சுக்கள், திணைக்களங்கள் மற்றும் அதிகார சபைகள், நிறுவனங்கள் ஆகியவற்றினால் செய்யூம் காரியங்கள் உரியவாறு செய்யப்படுவதாக கண்காணித்தல், அந்நிறுவனங்களினால் ஆரம்பிக்கப்படுகின்ற காரியங்களை தொடர்புபடுத்துதல், நிதி மற்றும் பௌதீக வளங்களை அபிவிருத்தி செய்வதுடன்இ மனித வளங்களை முகாமைப்படுத்துதல், பயிற்சிகளையளித்தல் என்பனவற்றை இலக்காகக் கொண்டு பிரதான செயலகம் தென் மாகாண சபையின் நிறுவன நிருவாகத்தின் கேந்திர ஸ்தானமாக விளங்குகின்றது.


இந்நிருவாக கேந்திர ஸ்தானத்தின் நேரடி கண்காணிப்பாகக் கருமமாற்றும் அதிகாரங்கள், பொறுப்புகள் பிரதம செயலாளருக்கு அளிக்கப்பட்டுள்ளது. 1982 இல 42 கொண்ட மாகாண சபைகள் சட்டத்தின் 31வது பிரிவின் கீழ் அதிமேதகு ஜனாதிபதி அவர்களால் மாகாண முதலமைச்சின் இணக்கப்பாட்டுடன் பிரதான செயலாளர் நியமிக்கப்படுவார். அதன் படி இவ்வூத்தியோகத்தரால் கீழ்க் காணும் அலகுகளின் நேரடி கண்காணிப்பாளராக கருமமாற்றுவார்